20/09/2026
அறிவுத்தோட்டம் வளம் குன்றா வேளாண்மை – வேளாண் சுற்றுலா – அறிவு மற்றும் வளக் களஞ்சியம்
அறிவுத்தோட்டம் (Arivuthottam) என்பது வேளாண்மை, சுற்றுச்சூழல், அறிவியல் சிந்தனை, இயற்கையோடு இணைந்த வாழ்வியல் மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு கள அடிப்படையிலான கற்றல், பயிற்சி மற்றும் சமூக மாற்ற மையம் ஆகும்.
நிறுவனர்: கு செந்தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அறிவொளி இயக்கம் செயல்பாட்டாளர்
வேலூர் மாவட்டம், காளாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அறிவுத்தோட்டம், கடந்த 15 ஆண்டுகளுக்களாக வளங்கன்றா வேளாண்மையை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், வேளாண்மையை வாழ்வியலோடு இணைத்தல்,
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நேரடி அனுபவத்தின் மூலம் கற்றலை வழங்குதல், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அறிவுத்தோட்டம் செயல்பட்டு வருகிறது.
தற்போது அறிவுத்தோட்டத்தின் செயல்பாடுகள் மூன்று முக்கியக் கூறுகளின் அடிப்படையில் நடைபெறுகின்றன:
1. நிலையான வேளாண்மை பண்ணை (Sustainable Agriculture Farm)
அறிவுத்தோட்டத்தின் அடிப்படைத் தளம் அதன் வளங்குன்றா வேளாண்மை பண்ணையாகும்.
இங்கு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை முறைகள் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு, அவற்றை நேரடியாகக் காணவும் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
முக்கிய செயல்பாடுகள்:
இயற்கை / அங்கக வேளாண்மை முறைகள்
பல்வகைப் பயிர் சாகுபடி மற்றும் Multi-cropping
இயற்கை உரங்கள் மற்றும் உயிரியல் பூச்சி மேலாண்மை
மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை
மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும் Mulching முறைகள்
பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்தல்
ஒருங்கிணைந்த வேளாண்மை முறைகள்
மரங்கள், பழத்தோட்டம், காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மலர் தோட்டம்
இயற்கை வளங்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல். வேளாண்மையுடன் கால்நடை, கோழி, தேனீ வளர்ப்பு போன்ற ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள்பண்ணை என்பது வெறும் உற்பத்தி நடைபெறும் இடமாக மட்டுமல்லாமல்,
**“செய்து கற்றுக்கொள்ளும் திறந்தவெளி வகுப்பறை”**யாகவும் செயல்படுகிறது.
2. வேளாண் சுற்றுலாAgro-tourism
இயற்கை வேளாண்மையையும் கிராமப்புற வாழ்வியலையும் பொதுமக்களுடன் இணைக்கும் வகையில் அறிவுத்தோட்டம் வேளாண் சுற்றுலா மையமாகவும் செயல்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அறிவுத்தோட்டத்திற்கு வருகை தருகின்றனர்.
வருகையாளர்களுக்கு இயற்கையை ரசிப்பதுடன், பண்ணைச் செயல்பாடுகளை நேரடியாகக் காணவும், அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
வேளாண் சுற்றுலாவின் முக்கிய நோக்கங்கள்:
இயற்கையோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்துதல்.
வேளாண்மையைப் புரிந்துகொள்ளச் செய்தல்.
உணவு எவ்வாறு உற்பத்தியாகிறது என்பதை அறியச் செய்தல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்
சுற்றுச்சூழலுக்கு உகந்த சமூகத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவரின் பங்கைப் புரியச் செய்தல்
கிராமப்புற பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளச் செய்தல்
பாரம்பரிய அறிவு, உள்ளூர் பண்பாடு மற்றும் கிராமிய வாழ்வியல் மதிப்புகளை அறிமுகப்படுத்துதல்
கிராமிய விளையாட்டுகள், கலைகள் மற்றும் சமூகப் பண்பாடுகளை மீட்டெடுத்தல்
இயற்கை மற்றும் அங்கக வேளாண் பொருட்களை நேரடியாக அறிமுகப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல்
மாணவர்களுக்கு கள அனுபவம் மற்றும் வாழ்க்கைத் திறன்களை வழங்குதல்
அனுபவ அடிப்படையிலான கற்றல்.
அறிவுத்தோட்டத்தின் வேளாண் சுற்றுலா, “பார்வை → அனுபவம் → புரிதல் → செயல்பாடு” என்ற அணுகுமுறையில் அமைந்துள்ளது.
பண்ணை நடை, பயிர்களை அறிதல், மண் மற்றும் நீர் பாதுகாப்பு,
தோட்டப் பணிகள்,
பாரம்பரிய விளையாட்டுகள்,
இயற்கை உணவு, கிராமிய வாழ்வியல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உயிரோட்டமான கற்றல் அனுபவம் வழங்கப்படுகிறது
3. அறிவு மற்றும் வளக் களஞ்சியம்
Resource Repository
அறிவுத்தோட்டம் ஒரு பண்ணை அல்லது சுற்றுலா மையமாக மட்டும் இல்லாமல், வேளாண்மை, தொழில் முனைவு, திறன் வளர்ப்பு மற்றும் சமூக மாற்றத்திற்கான அறிவு மற்றும் வளக் களஞ்சியமாகவும் உருவாக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கான பயிற்சிகள் இயற்கை / அங்கக வேளாண்மை
வளங்குன்றா வேளாண்மை முறைகள் வேளாண் சுற்றுலா
மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள். சந்தைப்படுத்தல் மற்றும் நேரடி விற்பனை.
பண்ணை சார்ந்த சிறு தொழில்கள் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும்
கிராமப்புற அமைப்புகளுக்காக:திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்
வேளாண் சார்ந்த தொழில் வாய்ப்புகள்
மதிப்புக்கூட்டுதல்
தொழில் முனைவோர் பயிற்சி
சந்தை வாய்ப்புகள்
குழு அடிப்படையிலான தொழில் முயற்சிகள்போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான செயல்பாடுகள்மாணவர்கள் வெறும் வேலைவாய்ப்பைத் தேடுபவர்களாக இல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாகவும் உருவாக வேண்டும் என்ற நோக்கில்:தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்கள்.
வேளாண் சார்ந்த தொழில் வாய்ப்புகள்மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்.
திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்கிராமப்புற புதுமை மற்றும் சமூகத் தொழில் முயற்சிகள்அனுபவ அடிப்படையிலான கற்றல்போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
வளக் குழுக்கள்இச்செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லக்கூடிய விவசாயிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில் முனைவோர் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட வளக் குழுக்கள் (Resource Groups) உருவாக்கப்படுகின்றன.
இக்குழுக்கள் அறிவுத்தோட்டத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும், தேவையான இடங்களில் களப் பயிற்சிகளை வழங்குவதற்கும் உதவும்.
சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு
இயற்கை வாழ்வியல், உணவு, உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்ற புரிதலை ஏற்படுத்தும் வகையில்:
சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்.
உடல்நலப் பரிசோதனை முகாம்கள்
இயற்கை உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு
ஆரோக்கியமான வாழ்வியல் குறித்த நிகழ்வுகள் போன்ற செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
உணவு மற்றும் விருந்தோம்பல் அறிவுத்தோட்டத்திற்கு வரும் குழுக்களுக்குத் தேவையான உணவு, இயன்றவரை பண்ணையிலேயே தயாரித்து வழங்கும் முறையை உருவாக்குவது திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பண்ணையில் விளையும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் பிற இயற்கை விளைபொருட்களைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பதன் மூலம்:பண்ணை → உணவு → ஆரோக்கியம் → சுற்றுச்சூழல்என்ற தொடர்பை நேரடியாக அனுபவிக்கச் செய்ய முடியும்.
அறிவுத்தோட்டத்தின் அனைத்து பயிற்சி மற்றும் கற்றல் நிகழ்வுகளும் தற்போது தங்குமிட வசதியற்ற (Non-residential) முறையில் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றன.
அறிவுத்தோட்டத்தின் தொலைநோக்கு பார்வை. Vision
இயற்கையோடு இணைந்து வாழும், அறிவியல் சிந்தனையுடன் செயல்படும், சமூகப் பொறுப்புணர்வும் மனிதநேயமும் கொண்ட நிலையான சமூகத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பது.
அறிவுத்தோட்டத்தின் பணி.
உடனடி செயல்பாடுகள்
Mission
இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல், அறிவியல் மனப்பான்மை, உள்ளூர் அறிவு, ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து,செய்து கற்றல்அனுபவத்தின் மூலம் புரிதல்அறிவைப் பகிர்தல்திறன்களை வளர்த்தல்.
தொழில் முனைவுகளை உருவாக்குதல்
இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்
சமூகப் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குதல்ஆகிய செயல்பாடுகளின் மூலம் தனிநபர், குடும்பம், விவசாயம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு பங்களிப்பது.அறிவுத்தோட்டத்தின் தனித்துவம்அறிவுத்தோட்டத்தின் சிறப்பு,
மேற்கண்ட செயல்பாடுகள் தனித்தனியாக நடைபெறுவதில் அல்ல; அவை ஒரே வாழ்வியல் கற்றல் சூழலாக ஒருங்கிணைக்கப்படுவதில்தான் உள்ளது.
வேளாண்மை → இயற்கை → உணவு → ஆரோக்கியம் → அறிவியல் சிந்தனை → திறன் → தொழில் முனைவு → சமூகப் பொறுப்பு என்ற தொடர்ச்சியான தொடர்பை அனுபவத்தின் மூலம் உணர்த்தும் ஒரு “Living Learning Ecosystem” ஆக அறிவுத்தோட்டம் உருவாகி வருகிறது.
எனவே, அறிவுத்தோட்டம் ஒரு பண்ணை மட்டுமல்ல;ஒரு சுற்றுலா மையம் மட்டுமல்ல;ஒரு பயிற்சி மையம் மட்டுமல்ல.“இயற்கையோடு இணைந்து கற்று, அறிவுடன் செயல்பட்டு, சமூகத்துடன் வளர்வதற்கான களப் பல்கலைக்கழகம்”என்ற நோக்கத்துடன் அறிவுத்தோட்டம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
அறிவுத்தோட்டம் – வளங் குன்றா வேளாண்மை | வேளாண் சுற்றுலா | அறிவு மற்றும் வளக் களஞ்சியம்
தொடர்புக்கு: 9443032436
ARIVUTHOTTAM
Sustainable Agriculture • Agro-tourism • Knowledge & Resource Repository
Arivuthottam is a field-based learning, training and social transformation initiative that integrates sustainable agriculture, environmental education, scientific thinking, healthy living and rural development.
Located at Kaalampattu village, near Latheri in Vellore District, Tamil Nadu, Arivuthottam has been practising sustainable and natural farming for the last 15 years.
Founder :K.Senthamil Selvan an activist of Tamil Nadu Science Forum and Arivoli Iyakkam
Over the years, the farm has evolved beyond agricultural production into a living learning space where students, farmers and the general public can experience nature, agriculture and rural life directly.
At present, the activities of Arivuthottam are organised around three major components:
1. SUSTAINABLE AGRICULTURE FARM
A Living Laboratory for Natural and Ecological Farming
The sustainable agriculture farm is the foundation of Arivuthottam.
The farm demonstrates practical methods of natural, organic and environmentally sustainable agriculture.
Visitors and trainees are able to observe and understand these practices directly in the field.
Major activities include:
- Natural and organic farming practices
- Multi-cropping and crop diversity
- Use of natural and organic inputs
- Biological pest and disease management
- Rainwater harvesting and water conservation
- Mulching and soil-moisture conservation
- Biodiversity conservation
- Integrated farming systems
- Fruit orchards and vegetable cultivation
- Herbal and medicinal plants
- Flower gardens
- Recycling and reuse of farm resources
- Scope for integrated activities such as livestock, poultry and beekeeping
The farm is not merely a place of production. It functions as an open-air classroom where people can learn by observing, participating and doing.
2. AGRO-TOURISM
Connecting People with Nature, Farming and Rural Life
Arivuthottam functions as an agro-tourism and experiential learning centre, welcoming:
- School students
- College and university students
- Agriculture students
- Farmers
- Families
- Teachers
- General public
The objective is not simply to provide recreation, but to create opportunities for people to experience nature and understand agriculture and rural life.
Major objectives of agro-tourism
- To reconnect people with nature
- To provide direct exposure to sustainable and organic farming
- To help people understand where their food comes from
- To create awareness about environmental conservation
- To help visitors understand their role in building an eco-friendly society
- To understand rural livelihoods and the rural economy
- To introduce local knowledge and traditional rural practices
- To preserve and experience traditional rural games and cultural activities
- To introduce natural and organic farm products
- To create opportunities for direct marketing of farm products
- To provide experiential and field-based learning for students
Learning through Experience
The agro-tourism activities follow a simple learning approach:
Observation → Experience → Understanding → Action
Farm walks, interaction with crops and trees, demonstrations of soil and water conservation, exposure to farming practices, traditional games, rural activities and interaction with farmers provide visitors with a practical and memorable learning experience.
Thus, agro-tourism at Arivuthottam is designed as a combination of:
Nature + Agriculture + Learning + Rural Culture + Recreation
3. KNOWLEDGE & RESOURCE REPOSITORY
A Centre for Training, Skill Development and Social Enterprise
Arivuthottam is being developed not only as a farm and agro-tourism centre, but also as a Knowledge and Resource Repository for agriculture, entrepreneurship, skill development and community initiatives.
Training for Farmers
Training programmes can be organised on:
- Natural and organic farming
- Sustainable agriculture
- Agro-tourism
- Value addition of agricultural produce
- Direct marketing and local markets
- Farm-based enterprises
- Appropriate technologies
- Resource conservation
Training for Self-Help Groups and Farmer Producer Organisation
Arivuthottam can provide capacity-building programmes for:
- Self-Help Groups (SHGs)
- Farmer Producer Groups
- Farmer Producer Organisations
- Rural community organisations
Areas may include:
- Skill development
- Value addition
- Product development
- Entrepreneurship
- Marketing
- Group enterprises
- Farm-based livelihood opportunities
Entrepreneurship and Skill Development for Students and Youth
Arivuthottam seeks to encourage young people not only to seek employment but also to explore opportunities to create livelihoods and enterprises.
Motivational and training programmes can focus on:
- Agri-based enterprises
- Value-added agricultural products
- Rural entrepreneurship
- Social enterprises
- Skill development
- Innovation and appropriate technology
- Opportunities in sustainable agriculture and allied activities
The objective is to encourage young people to identify local resources and opportunities and develop them into meaningful livelihood initiatives.
---
RESOURCE GROUPS
A network of Resource Persons and Resource Groups can be developed to support and expand the activities of Arivuthottam.
These may include:
- Farmers
- Agricultural experts
- Teachers and educators
- Scientists and technical experts
- Social workers
- Entrepreneurs
- Trainers
- Environmental activists
- Community resource persons
The resource groups can contribute to training, field activities, student programmes, awareness campaigns and community initiatives.
---
HEALTH AND WELL-BEING
Arivuthottam also seeks to connect food, agriculture, environment and health.
Possible activities include:
- Health awareness programmes
- Health screening camps
- Nutrition awareness
- Healthy food demonstrations
- Awareness on healthy lifestyles
- Programmes connecting agriculture, food and human well-being
Where appropriate, food for visiting groups can be prepared within the farm itself, using vegetables, greens, fruits and other farm produce.
This provides an opportunity to demonstrate the connection:
Farm → Food → Health → Environment
All training and learning programmes are currently planned and conducted on a non-residential basis.
---
VISION
To contribute to the creation of a sustainable society where people live in harmony with nature, think scientifically, act with social responsibility and uphold human values.
MISSION
To integrate natural farming, environmental sustainability, scientific temper, local knowledge, healthy living and social responsibility and promote:
- Learning by doing
- Experiential learning
- Knowledge sharing
- Skill development
- Entrepreneurship
- Conservation of natural resources
- Healthy and sustainable lifestyles
- Social responsibility
- Rural development
- Responsible citizenship
through field-based learning and community-oriented activities.
---
THE UNIQUE CHARACTER OF ARIVUTHOTTAM
The uniqueness of Arivuthottam lies not merely in conducting agriculture, tourism or training activities separately.
Its strength is in bringing these elements together as a single living learning ecosystem.
The integrated learning pathway is:
Agriculture
↓
Nature & Biodiversity
↓
Food
↓
Health
↓
Scientific Thinking
↓
Skills
↓
Entrepreneurship
↓
Social Responsibility
Arivuthottam therefore seeks to become more than a farm, more than an agro-tourism centre and more than a training centre.
Arivuthottam is envisioned as a field-based “Open University of Sustainable Living” — a place where people learn from nature, learn by doing, share knowledge and develop solutions for a sustainable and humane society.
---
ARIVUTHOTTAM
Sustainable Agriculture | Agro-tourism | Knowledge & Resource Repository
Learning from Nature • Learning by Doing • Growing with Society
தொடர்புக்கு: 9443032436