தலைமை
வெஸ்டீஜ் அணி - ஒரு வெற்றி கூட்டணி
தங்களது வாழ்க்கைத் தரத்தை சிறப்பானதாக்க, வெஸ்டீஜ் - இந்தியாவில் டைரக்ட் செல்லிங் புரட்சிக்கு முன்னோடியாக திகழ்ந்த தொழில்முறைத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை மிகக் கவனமாக அமைத்துள்ளது.
திரு.கெளதம் பாலி - தலைமை ஆலோசகர், தலைமை விற்பனை அதிகாரி மற்றும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவரும், பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவருமான திரு
.கெளதம் பாலி அவர்கள் வெஸ்டீஜ் நிறுவனத்தை வெற்றிகரமாக தலைமை ஏற்று நடத்தி வருகிறார். அவருடைய தனித் திறமை மற்றும் நிகரற்ற நிபுணத்துவம், தனது வலுவான தலைமையின் கீழ் குறிப்பிடத் தகுந்த, அடையாள காணும் அளவுக்கு - அதாவது இந்தியாவின் முதல் ஐந்து நேரடி விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக வெஸ்டீஜை மாற்றிவிட்டது எனலாம். மேலும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் 100 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்தும் வருகிறது.
திரு.கன்வர் பீர் சிங் - நமது தகவல் தொழில்நுட்ப இயக்குனர், நேரடி விற்பனை நிறுவனங்களுக்கான சாஃப்ட்வேரை உருவாக்குதல், பராமரிப்பதில், மென்பொருள் மேம்பாடு மற்றும் நிரலாக்கம் போன்ற துறைகளில் பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்தவர். அவரது கருத்தும், பல்வேறு விதமான தீர்வுகளும் வெஸ்டீஜ் நிறுவனத்தின் வளர்ச்சிளை வடிவமைப்பதில் ஒரு கருவியாக அவர் பங்கு வகிக்கிறார் என்றால் மிகையாகாது.
திரு.தீபக் சூத் - நமது இயக்கத்திற்கான இயக்குனர், முன்னணி நேரடி விற்பனை நிறுவனங்களில் பொருட்கள் விநியோகம் மற்றும் கிடங்குகள் கையாளுவதில் சிறந்த அனுபவம் வாய்ந்தவர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் வெஸ்டீஜ் நிறுவனத்தின் வெற்றியை உயர்த்த, உறுதிசெய்ய, எதிர்கால நோக்கத்துடன் தனது நிபுணத்துவத்துடன் வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறார்.
இந்த வெஸ்டீஜ் வெற்றி கூட்டணி பல ஆண்டுகளாகப் பெற்ற நிர்வாக நிபுணத்துவத்துடன், மக்களுக்கு சக்தியளிப்பதன் மூலம் அவர்களை வெற்றியாளர்களாக்குவதையே இலட்சியமாக கொண்டுள்ளது.
வெஸ்டீஜ் நேரடி விற்பனை துறையில் உள்ள அனைவரின் எதிர்பார்பையும், அவர்களின் மனதில் உள்ளவற்றை பூர்த்தி செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெஸ்டீஜ் உடன் செயல்படுவது ஒரு உண்மையான பயனளிக்கும் அனுபவமாக இருக்கும். அதோடு இது போன்ற பயன்களுக்காக இந்த குழு ஒன்றிணைந்து உயர் தரமுடைய பொருட்களுடன், ஒரு அருமையான தொழில் வாய்ப்பை உருவாக்குகிறது.
முக்கியமான பதவிகளில் இதுபோன்ற தொழில்முறைத்துவ நிபுணர்களுடன், நமது தொழில் பாதுகாப்பான கைகளில் இருக்கிறது மற்றும் வெஸ்டீஜ் நமக்கு வெற்றி மட்டுமே தரும் தொழிலாக இருக்கப் போகிறது என்று உறுதியுடன் இருக்கலாம்.