02/08/2025
🎉இந்த உலகத்தில் என்னுடைய பிறப்பையும் இறப்பையும் தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது ஆனால் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலங்களில் நான் எப்படி வாழலாம் என்பதை தீர்மானிக்கும் முழு அதிகாரமும் எனக்கு இருக்கிறது ✍️
👉அப்படிப்பட்ட
மதிப்பு மிக்க நாட்களை
எனக்காக மட்டும் வாழ்ந்ததாக இல்லாமல் நம் நாட்டிற்காகவும் வாழ்ந்தேன் என்ற பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் 👍
🫰என் வாழ்க்கை பணத்திற்காக வாழாமல் கொள்கைக்காக வாழ்ந்ததாக இருக்க வேண்டும் எனக்கான கொள்கையை நான் முடிவு செய்து விட்டேன் அதன் வழியில் நான் ஒரு போராட்டத்தை தொடங்குகிறேன் அகிம்சை வழியில் போராடிய
மகாத்மா காந்தியைப் போல்
ஆயுதம் ஏந்தி போராடிய பகத்சிங்,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
போல் நான் ஒரு வழியை தேர்ந்தேடுத்தேன் அது வர்த்தகம் வழியிலான போராட்டம் இது நாட்டின் சுதந்திரத்திற்காக இல்லை மக்களின் வறுமைக்கு எதிரான போராட்டம் இது ஒரு தனி மனிதனுக்காகவோ அல்லது ஒரு தனி இனத்திற்காகவோ தொடங்கும் போராட்டமல்ல இது ஒட்டு மொத்த
மனிதகுலத்தின் தேவைக்கான போராட்டம் இது நமக்கான போராட்டம்
இந்த வர்த்தகப் போராட்டதின் வளர்ச்சி நம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் 👌
👏நான் வகுத்துக்கொண்ட
கொள்கை எந்த மாதிரியானது என்பதை புரிந்து கொள்ளும்படி ஒரு வரியில் சொல்வதென்றால் நம் நாட்டில் ரேஷன் கடைகளே இருக்கக் கூடாது அவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்💫
👊நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று உணர்ச்சி பொங்க பேசும் கட்சிகளுக்கோ
என் உயிருனும் மேலான ரசிகப் பெருமக்களே என்று நன்றியுரை ஆற்றும் நடிகர் நடிகைகளுக்கோ ரேஷன் கடை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இத்தனை வருடங்களாகியும் இன்னும் சிந்திக்க கூட தோன்றாமல் முட்டாளாக இருந்து இவர்களுக்கு பால் அபிஷேகம் மலர் அபிஷேகம் செய்யும் மக்களாகவே நாம் இருக்கிறோம் என்பது வேதனையா? அல்லது சாதனையா? இனியாவது அறிவோடு சிந்தியுங்கள் அதிகாரத்திற்கான அரசியலை ஓழித்து விட்டு மக்களுக்கான அரசியலை ஆதரியுங்கள் நாம் போடும் ஒட்டு நமக்கு பயன்பட வேண்டும் என்று சுயநலமாக எண்ணாமல் நம் நாட்டிற்கும் இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை நம் ஒவ்வோருவருக்கும்
வர வேண்டும்👍
👏வியாபாரிகள் தொழில் செய்பவர்கள் மற்றும் மக்கள் நீங்கள் அனைவரும் ஒண்றிணைந்து உங்கள் ஆதரவை தந்து எங்களோடு இணைந்து எங்களுக்கான ஒரு வாய்ப்பை உருவாக்கிட ஒத்துழைப்பு தாருங்கள் அது நமக்கும் நம் நாட்டிற்குமான ஒரு மாற்றத்தை உருவாக்கும் இது இது நாம் மட்டும் வாழ்ந்து விட்டு செல்வதற்காக படைக்கப்பட்ட உலகம் கிடையாது நமக்கு பின்னால் வரும் சந்ததியினரும் வாழ்வதற்கான உலகம் இதில் அவர்கள் எந்த குறையுமின்றி மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கி தந்து விட்டு செல்வது நம் கடமையாகும்
எங்கள் வலி யாருக்கு புரிகிறதோ இல்லையோ நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களுக்கு
கண்டிப்பாக புரியும்🫰💫
நன்றி
மா. தங்கவேல்
9841529199