J K MART

J K MART இயற்கைக்கு மாறாக ரசாயனங்கள் கலந்து விற்பனையாகிற உணவுப் பொருட்களை உபயோகித்தால் கூடிய விரைவில் கேன்சர்

29/05/2026
29/05/2026
15/05/2026

#70+ingredients
mix
#100% organic
Do you want call📲 072000 93553

முட்டை தானே என்று நீங்கள் கடந்து செல்லக்கூடாது.விதை இழந்த இனம் விடுதலை பெற முடியாது.இன்று நாம் சாப்பிடும் அன்றாட உணவுகள்...
28/04/2026

முட்டை தானே என்று நீங்கள் கடந்து செல்லக்கூடாது.
விதை இழந்த இனம் விடுதலை பெற முடியாது.
இன்று நாம் சாப்பிடும் அன்றாட உணவுகள் அனைத்துமே தண்ணீர் முதல் சமையல் தாளிக்கும் எண்ணெய் வரை, உயிர்கள் இல்லாத கசடுகளாக மட்டுமே உள்ளன.
இதன் காரணத்தினால் தான் நாங்கள் நாட்டு ரகங்களை பயன்படுத்துங்கள் என்று வற்புறுத்தி வருகிறோம்.
இயற்கை உணவில் ரூ.50 மிச்சம் பிடிக்க போய்.
கருத்தரிப்பு மையங்களில் குழந்தைக்காக 5 லட்சம் செலவு செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறோம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நாட்டு தானிய வகைகள் தேவை இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். 📲 72000 93553 online store website 👇👇👇 https://vyaparapp.in/store/JKMart1

03/04/2026

#மூலநோய் முற்றிலும் குணமாக:

இன்றைய கால சூழலில் வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் மூலநோய் வருகிறது....உடற்சூடு,ஒழுங்கற்ற உணவு பழக்கம்,மலச்சிக்கல்,மலக்குடல் பகுதியில் ஏற்படும் தொற்று போன்றவற்றால் மூலநோய் வருகிறது....12வகை மூலநோய் உண்டு...அதனில் இரத்தமூலம் ஏற்பட்டால் முக்கியமாக கவனிக்க வேண்டும்...

மலத்தோடு சேர்ந்து இரத்தம் வெளியேறி கொண்டே இருக்கும்.உடல் மிகவும் பலகீனம் அடையும்.

நாட்டு வாழைபழத்தை தோலோடு நீள்வாக்கில் வெட்டி நல்ல விளைந்த சீரகத்தை தூவி மறுபடி அதை மூடி ஒருதுணியால் சுற்றி இரவில் வைத்துவிட வேண்டும்.மறுநாள் காலை வெறும் வயிற்றில் அதனை உண்ண வேண்டும்.தொடர்ந்து செய்துவர இரத்த மூலம் குணமாகும்.

வேறுமூலமாக இருந்தால் துத்தி இலை 7 ஒருபல் பூண்டு இதை அரைத்து நீரில் கலக்கி குடித்துவர குணமாகும்.சிவசிவ

#சிவாயநம

வெயில் வந்துருச்சு கூடவே நீர் சுருக்கு அதாவது நீர் குத்தல் என்று கூறுவார்கள் சிறுநீர் கழிக்கும் பொழுது கடுமையான வலியுடன்...
21/03/2026

வெயில் வந்துருச்சு கூடவே நீர் சுருக்கு அதாவது நீர் குத்தல் என்று கூறுவார்கள் சிறுநீர் கழிக்கும் பொழுது கடுமையான வலியுடன் சிறுநீர் சொட்டு சொட்டாக போவது இதற்கு காரணம் நீர்ச்சத்து குறைந்து போதல் உடலில் சூடு அதிகரித்தல். என்ன மருந்து சாப்பிட்டாலும் கேட்கவில்லை எனும் பொழுது நம் முன்னோர்கள் பயன்படுத்திய பானகம் குடித்துப் பாருங்கள் குடித்த பத்து நொடிகளில் நிவாரணம் கிடைக்கும்.

மறந்து போன நமது பாரம்பரிய பானகம்

உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி, இப்போது மருந்தே உணவாக மாறிவிட்டது. உடலை வலுவாக்கும் சக்தியையும் நோயை அண்டவிடாத தற்காப்பையும் கொடுக்கும் விதமாக நம் முன்னோர்கள் உருவாக்கிய பாரம்பரிய மருத்துவ உணவுகள்
வெயிலுக்கு ஏற்ற பானகம்

தேவையான பொருட்கள் :

வெல்லம் - 200 கிராம்
புளி - 50 கிராம்
பொடித்த சுக்கு - ஒரு டீஸ்பூன்
உப்பு, மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 2 புதினா இலைகள் - 5
எலுமிச்சைப்பழம் - 1.

செய்முறை:
1.வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

2.புளியையும் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

3.வெல்லக் கரைசலுடன், புளித் தண்ணீரையும் சேர்த்து, சுக்குத் தூள், உப்பு, மஞ்சள் தூள், ஏலக்காய்த் தூள் அனைத்தையும் சரியான விகிதத்தில் கலக்கவும்.

4. பிறகு, அதில் எலுமிச்சைச் சாறு அரை பழம், புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: உடலில் நீர் வறட்சியை சரி செய்யும். தேவையான நீர்ச் சத்தைக் கொடுத்து, சிறுநீர் கழித்து போவது நின்று நல்ல வழி நிவாரணையாக அமையும். வெயில் கால நோய்களிலிருந்து காக்கும். கோடைக்கு ஏற்ற பானகம் இது.

ப்ளூடூத் ஹெட்செட் நீண்ட நேரப் பயன்பாடு தைராய்டு கட்டிகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது: அதிர்ச்சியூட்டும் ஆய்வுத் தகவல...
19/03/2026

ப்ளூடூத் ஹெட்செட் நீண்ட நேரப் பயன்பாடு தைராய்டு கட்டிகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது: அதிர்ச்சியூட்டும் ஆய்வுத் தகவல்

தைராய்டு சுரப்பி கதிர்வீச்சுகளுக்கு மிகவும் உணர்திறன் கொண்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, தினசரி நீண்ட நேரம் ப்ளூடூத் ஹெட்செட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு தைராய்டு கட்டிகள் (Thyroid nodules) ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதைக் கண்டறிந்துள்ளது. சுமார் 600 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வயது மற்றும் பிற காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகும், ப்ளூடூத் பயன்பாட்டு நேரம் ஒரு முக்கிய அபாயக் காரணியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, தைராய்டு சுரப்பிக்கு மிக அருகில் இருக்கும் 'இன்-இயர்' (In-ear) மற்றும் 'நெக்பேண்ட்' (Neckband) வகை ஹெட்செட்களைப் பயன்படுத்துபவர்களுக்கே இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தத் திசுக்கள் சூடாவதால் ஏற்படும் பாதிப்பு அல்ல; மாறாக, ப்ளூடூத் அலைகளின் வெப்பமற்ற (Non-thermal) விளைவுகளான ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் (Oxidative stress), செல் சிக்னல்களில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் தைராய்டு திசுக்களில் ஏற்படும் நீண்டகால அழுத்தம் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வயதிற்கு அடுத்தபடியாக, ப்ளூடூத் பயன்பாட்டு நேரமே தைராய்டு கட்டிகள் ஏற்படுவதற்கான இரண்டாவது முக்கிய காரணமாக இந்த ஆய்வில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வயர்லெஸ் சாதனங்களுக்கான அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வரம்புகள் வெப்பத்தை மட்டுமே கருத்தில் கொள்கின்றன, ஆனால் இந்த ஆய்வு மிகக் குறைந்த அளவிலான கதிர்வீச்சுகளிலும் உயிரியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதை நிரூபித்துள்ளது.

27/02/2026

வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சா*க வேண்டியதுதான்” என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதைக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது.

ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள்.

மருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.

அவர்களது சமையலறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன.

மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன்படுத்தினர்.

இவைகளைப் பயன்படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர்.

மஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது.

அது உணவுப் பொருள் வேகும்போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன்பட்டது.

துவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை.

பாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர்.

கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.

காலையில் நீராகாரத்தை உண்டனர்.

தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை.

மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.

மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள்.

உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்துவிடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள்.

எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப்பட்டிருந்தது.

பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள்.

உண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது.

இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும்.

நெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள்.

அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள்.

இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது.

மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும்.

இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள்.

அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குழாயை மேலும் விரித்து விடும்.

பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள்.

இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள். அடுத்து மோர் சாதம்.

இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும்.

அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும்.

பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம்.

இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

நாமும் இயன்றவரை முன்னோர் உணவுப் பழக்கங்களை கையாள முயற்ச்சிப்போம்.

“ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்”

யாருக்காவது உதவட்டும். படித்து விட்டு ஷேர் செய்யவும்..குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து....குறட்டை உண்டாக காரணம் என்ன?...
03/02/2026

யாருக்காவது உதவட்டும். படித்து விட்டு ஷேர் செய்யவும்..
குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து....

குறட்டை உண்டாக காரணம் என்ன?

சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும் போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது.

தேவையான பொருட்கள்:

மஞ்சள், ஏலக்காய், தேன்.

செய்முறை:-கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும்.

இதில் ஏலக்காய் தட்டிபோடவும். பின்பு ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இறுதியாக வடிகட்டி தேன் சேர்க்கவும். இதனை இரவு தூங்கபோகும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும். சளிக்கு மருந்தாகவும் அமைகிறது. இந்த மருந்து நெஞ்சு சளியை கரைக்கும்...

Address

No 49 Street Anthony Nagar, Kovilpathagai, Avadi
Chennai
600062

Alerts

Be the first to know and let us send you an email when J K MART posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category