Jega Regenerative Integrated Farm

Jega Regenerative Integrated Farm JeRIF is an organic integrated farm with a regenerative model. And we are manufacturing organic fertilizers and pesticides.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும், யாழ்ப்பாண விஞ்ஞான சங்கமும் இணைந்து நடாத்திய மண்புழு உரம் போட்டியில் 3ம் இட...
22/05/2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும், யாழ்ப்பாண விஞ்ஞான சங்கமும் இணைந்து நடாத்திய மண்புழு உரம் போட்டியில் 3ம் இடத்தை பெற்றுக்கொண்டமைக்கான,
🥉வெண்கலப்பதக்கம்
🛡️ சிறப்புக் கேடயம்
📜 சான்றிதழ்
💰 பணப்பரிசு
ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டது. பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய விரிவுரையாளர் குழாமினருக்கு மனமார்ந்த நன்றிகள்!

13.02.2026 யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடமும் காவேரி கலாமன்றமும் இணைந்து வழங்கிய,தரமான நடுகைப் பொருட்கள் உற்பத்தி மற்ற...
14/02/2026

13.02.2026
யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடமும் காவேரி கலாமன்றமும் இணைந்து வழங்கிய,
தரமான நடுகைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் கால நிலை மாற்றத்திற்குத் தாங்கும் பயிர்ப் பொருத்தம் தொடர்பான் ஒருநாள் பயிற்சிப் பட்டறையின் நிழற்படங்கள்.

நெல் உளர விடும் தளத்திற்கான கேள்வியை ஈடுகட்டுவதில் சிரமமே காணப்படும், அதற்காக பயன்படுத்தப்படும் நிலம் வேறு தேவைகளுக்கு ப...
31/01/2026

நெல் உளர விடும் தளத்திற்கான கேள்வியை ஈடுகட்டுவதில் சிரமமே காணப்படும், அதற்காக பயன்படுத்தப்படும் நிலம் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது மேலும் அதிக வெப்பத்தால் தளங்கள் சேதமடைவதால் பராமரிப்பு மற்றும் நெல்விரயமாதல் செல்வாக்கு செலுத்துகிறது.

தார் வீதியில் உளரவிடல் சட்டரீதியாக குற்றமாயினும் மனிதாபிமானமாக அரசு பாராமுகம் கொண்டுள்ளது, அத்துடன் இது போக்குவரத்து தொந்தரவு, பயணத் தாமதம், மற்றும் வீதி விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது.
காப்பெற் வீதியில் உலரவிடும் நெல்லின் அரிசியை உண்பதால் சுகாதார பிரச்சினைகளையும் தோற்றுவிக்க வாய்ப்புள்ளது.

இதற்கு தீர்வாக குறைந்த பட்டசம் விவசாய உள் வீதிகளை கொங்கிரீட் இடுவதால் அதனை நெற் தளமாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது இதனால் வீதிப் போக்குவரத்து இடையூறுகளையும் நெல் ஆரோக்கியத்தையும் பேன முடியும்.

நிரந்தர தீர்வாக கமக்காரர் அமைப்புக்கள் ஒன்றினைந்து நெல் உளரவிடும் எந்திரங்களை கொள்வனவு செய்து குறைந்த விலையில் பங்குதாரர்களுக்கு வாடகைக்கு விடுவதே சிறப்பானதாகும். இங்கு விவசாயிகளை ஒன்றினைப்பதே சவால் இதை வெற்றிகண்டால் எல்லாம் சுகமே.

விவசாய கண்காட்சி 2026மாவட்ட விவசாய பயிற்சிக் கல்லூரி முல்லைத்தீவு.
26/01/2026

விவசாய கண்காட்சி 2026
மாவட்ட விவசாய பயிற்சிக் கல்லூரி முல்லைத்தீவு.

26/01/2026

மகிழ்ச்சிகரமான நெல் அறுவடை

புத்தாண்டில் நல்ல தொடக்கம்...உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன உரங்களை புறம் தள்ளி குறைந்தபட்சமாக இயற்கை விவசாயத்தில் ...
01/01/2026

புத்தாண்டில் நல்ல தொடக்கம்...

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன உரங்களை புறம் தள்ளி குறைந்தபட்சமாக இயற்கை விவசாயத்தில் சிறிய வீட்டுதோட்டமாவது ஆரம்பிப்போம்.

மண்புழு உரம் 1kg 200rs
50Kg எடுத்தால் 1kg 180rs
100kg எடுத்தால் 1kg 150rs

50kg ற்கு வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு இலவச டெலிவரி.

இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகளுக்கு
+94773424784 call/whatsapp

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
- Jerif பண்ணை வவுனியா

எங்கள் வழிகாட்டி இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினம்.
30/12/2025

எங்கள் வழிகாட்டி
இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினம்.

அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
25/12/2025

அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.

நேற்றைய தினம் கொழும்பு நோக்கி பயனித்த 5kg மண்புழு உரம்
20/12/2025

நேற்றைய தினம் கொழும்பு நோக்கி பயனித்த 5kg மண்புழு உரம்

ஒட்டறுத்தகுளம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் மல்லாவிக்கு மிக அன்மையில் கானப்படும் கிர...
19/12/2025

ஒட்டறுத்தகுளம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் மல்லாவிக்கு மிக அன்மையில் கானப்படும் கிராமம், இப் பெயருக்கான காரனம் பல சந்தர்ப்பங்களில் நகைச்சுவையாக கையாளப்பட்டாலும் இப் பெயர் பல வரலாற்று பின்னனிகளை கொன்டுள்ளது.

குறிப்பாக ஒட்டர் + அறுத்த குளம் என்ற பெயரே பேச்சு வழக்கில் ஒட்டறுத்தகுளமாக இன்று மருவி உள்ளது.

இதே போல ஒட்டங்குளம், ஒட்டன்கட்டுக்குளம். ஒட்டுக்குளம் ஆகிய பெயர்களும் இதே வரலாற்று பின்னனியையே கொண்டுள்ளது.

பழைய குளங்கள் மற்றும் அணைகள் அமைப்பதில் ஒட்டர் சமூகத்தினர் முக்கியப் பங்காற்றியுள்ளனர், இதனால் அவர்களின் சமூகப் பெயருடன் நீர்நிலைகளின் பெயர்கள் இணைந்திருக்க வாய்ப்புள்ளது.

ஒட்டர் (Oddar, Vodra, Odde, Bhovi, or Waddar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வாழுகின்ற தெலுங்கு பேசும் இனக்குழுவினர் ஆவார்.

ஒட்டர் சமூகம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவை கல் ஒட்டர், மண் ஒட்டர், மரம் ஒட்டர், உப்புர ஒட்டர், சூரா மாரி ஒட்டர்கள், பெத்த போயர், ஒட்ராஜ்புத், சூரிய குல சத்திரியர், சந்திர குல சத்திரியர், போயர்.

இவர்கள் கல் உடைத்தல், கட்டிட வேலைகள், செங்கல் தயாரித்தல், சுண்ணாம்பு தயாரிக்கும் மூலங்கள் வெட்டுதல், அணைகள் கட்டுதல், போன்ற பணிகளை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

கோயில் தலங்கள் அதிகமாக உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கல் ஒட்டர்கள் (போயர்) மிகவும் செழிப்போடு இருந்தார்கள்.... கோவில் செய்யப்படும் கல் வேலைகள் எல்லாம் இந்த சமூகத்தினரை செய்து.. வந்தனர். இதனால் மன்னர்கள் அதிக கொடை கொடுத்து வந்தனர்... பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு சத்திரம் அமைத்து உணவளித்தனர்... இதுதான் உண்மையான வரலாறு.... கல் ஒட்டர்கள் ஒட்டன்சத்திரத்தின் சுற்று பகுதிகளில் இன்றும் வசித்து வருகிறார்கள்... நாய்க்கர் ஆட்சியில் படைத்தளபதிகளாக பணிபுரிந்தனர், ஒட்டன்சத்திரம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

எனவே இழத்து அரசர் காலத்தில் ஒட்டர்கள் குளங்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டமையை இது எடுத்துக்காட்டுகிறது.

ஆய்வுகள் தொடரும்....
கனகராயனூர் மெஜஸ்ரி

Address

Puthukkulam, Kanakarayankulam
Vavuniya
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jega Regenerative Integrated Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share