AGAM Healthier Choice அகம் ஆரோக்கியமான தேர்வு

  • Home
  • India
  • Madathukulam
  • AGAM Healthier Choice அகம் ஆரோக்கியமான தேர்வு

AGAM Healthier Choice அகம் ஆரோக்கியமான தேர்வு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AGAM Healthier Choice அகம் ஆரோக்கியமான தேர்வு, Health Food Shop, Ganesha puram, madathukulam, Madathukulam.

AGAM Healthier Choice 🌿
Traditional Wood Pressed Oils
Own Farm Coconut |Groundnut |Gingelly Oil
Pounded Masalas & Stone-Ground Flours
Authentic Traditional Way, No Chemicals
📍 Madathukulam,Tamil Nadu
🌐 www.agamspices.com
📞 Call / WhatsApp: 83447 64492

17/07/2026

"வணக்கம்! இன்று நம்ம AGAM Healthier Choice-ல் பாரம்பரிய முறையில் முருங்கைக்கீரை சாதம் பொடி எப்படி தயாரிக்கிறோம் என்று பார்க்கலாம்.
முதலில், இது நம்ம தோட்டத்தில் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் நாட்டு முருங்கை மரம். எந்தவித ரசாயன மருந்துகளும் தெளிக்காமல் வளர்க்கிறோம்.
இளம் முருங்கைக்கீரையை கையால் பறித்து, சுத்தம் செய்து, நிழலில் காயவைத்து, பாரம்பரிய முறையில் இடித்து முருங்கைக்கீரை சாதம் பொடி தயாரிக்கிறோம்.
இது சாதத்திற்கு மட்டுமல்ல, இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும். பாரம்பரிய சுவையையும், இயற்கையின் நன்மையையும் உங்கள் வீட்டிற்கு கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம்."

16/07/2026

🌾 பாரம்பரியம் மாறாத ஆரோக்கியம்! இனி சிரமமே இல்லை!
​பல மணி நேரம் மாவு ஆட்டும் கஷ்டம் இனி வேண்டாம்! உங்கள் உடல்நலனை கருத்தில் கொண்டு, Agam Healthier Choice சார்பாக, உயர்தர சிவப்பு சோளத்தை பாரம்பரியமான கல் உரலில் அரைத்துத் தயார் செய்துள்ளோம்.
​⚡ ஏன் அகம் சோள தோசை மாவு?
​கல் உரல் சிறப்பு: இயந்திரங்களால் சூடேறாமல், கல்லில் அரைப்பதால் மட்டுமே தானியங்களின் முழுமையான சத்துக்களும், சுவையும் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன.
​நேரம் மிச்சம்: இனி ஊற வைத்து, ஆட்டி, மெனக்கெட வேண்டியதில்லை. வெறும் தண்ணீர் சேர்த்தால் போதும்!
​இயற்கை முறை: 6-8 மணி நேரம் புளிக்க வைத்தால் பாரம்பரிய மணம்; அவசரமெனில் சிறிது புளித்த தயிர் சேர்த்து 1 மணி நேரத்திலேயே மொறுமொறுப்பான தோசை தயார்!
​🚫 கலப்படங்கள் இல்லை, நிறமூட்டிகள் இல்லை, பதப்படுத்தும் பொருட்கள் அறவே இல்லை!
​குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு, பாரம்பரியத்தின் சுவையை இன்றே பரிமாறுங்கள்!

16/07/2026

🌾 இன்று AGAM Healthier Choice-யில் சிவப்பு சோளம் தோசை மாவு பாரம்பரிய கல் அரைப்பு முறையில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
🪨 கல்லில் அரைப்பதால் இயற்கையான சுவை, மணம் மற்றும் சத்துக்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன.
✅ 100% இயற்கை
✅ கல் அரைப்பு முறை
✅ Preservatives இல்லை
✅ பாரம்பரிய சுவை
📲 WhatsApp Orders: +91 83447 64492
🌐 www.agamspices.com⁠
HealthyFood Millets NaturalFood TamilFood MadeInTamilNadu AgamSpices HealthyChoice Reels Shorts FoodProcessing MilletLife

15/07/2026

"மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் நியாயமான குரலுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! 🌾
​பல ஆயிரம் விவசாயிகளின் தொடர் முயற்சியாலும், ஒற்றுமையாலும் பாசனத்திற்கான உயிர்த் தண்ணீர் திறக்கப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேறியதைத் தொடர்ந்து, உழவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு களம் நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.
​எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லாமல், மண்ணையும் விவசாயத்தையும் மட்டுமே முன்னிறுத்தி போராடிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உழவு சிறக்கட்டும், உலகம் செழிக்கட்டும்! 🌊✨"
#விவசாயம் #உழவர்களின்வெற்றி #உயிர்த்தண்ணீர் #விவசாயிகள்ஒற்றுமை #பாசனத்தண்ணீர் FarmersVictory AgricultureTamilnadu

14/07/2026

இதுவரை கொடிசியா (CODISSIA) ஸ்டாலுக்கு நேரில் வந்து, எங்களை வாழ்த்தி ஆதரவு தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்! உங்களுடைய ஆதரவு தான் எங்களது பலம்.
​நேற்றோடு ஸ்டால் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இன்று முதல் மீண்டும் நமது பாரம்பரிய விவசாய வேலைகளையும், தரமான மசாலா இடிக்கும் பணிகளையும் முழு வீச்சில் தொடங்குகிறோம். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்! ❤️🌾
HandmadeMasala OrganicFarming FarmersLife BusinessGrowth

13/07/2026

கோயம்புத்தூர் கொடிசியாவில் நடைபெற்று வரும் இந்தியாவின் முன்னணி விவசாய வர்த்தக திருவிழாவான Agri Intex 2026-ன் ஐந்தாவது மற்றும் இறுதி நாள் இன்று!
​நவீன விவசாய தொழில்நுட்பங்கள், அதிநவீன கருவிகள், ட்ரோன்கள் மற்றும் விவசாயம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை ஒரே இடத்தில் காண இன்று ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளது. விவசாய பெருமக்களும், தொழில் முனைவோரும் இந்த இறுதி வாய்ப்பைத் தவறவிடாமல் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்!
​📍 இடம்: கொடிசியா (CODISSIA) வளாகம், கோயம்புத்தூர்.
​📅 தேதி: இன்று (ஜூலை 13, 2026) இறுதி நாள்.
​⏰ நேரம்: மாலை வரை.
​அனைவரும் வருக! விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்!

AgriculturalFair FinalDay ModernFarming TamilNaduAgriculture AgricultureLife AgriIntex

12/07/2026

பிரண்டை பயிரிட நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வீடியோவில்: ✅ பிரண்டை பயிரின் தற்போதைய மார்க்கெட் நிலை ✅ 6 மாத பயிரா? ✅ யார் வாங்குகிறார்கள்? ✅ தொக்கு, பொடி, மதிப்பு கூட்டிய பொருட்களுக்கு இருக்கும் தேவை ✅ விவசாயிகள் கவனிக்க வேண்டிய முக்கிய ஆலோசனைகள்
நாங்கள் AGAM நிறுவனத்தில் பிரண்டையை வைத்து பிரண்டை தொக்கு மற்றும் பிரண்டை பொடி தயாரித்து வருகிறோம். அதனால் உண்மையான அனுபவத்தை பகிர்ந்துள்ளோம்.
முதலில் மார்க்கெட்டை தெரிந்து கொள்ளுங்கள். பிறகு பயிரிடுங்கள். அதுதான் லாபத்திற்கான முதல் படி.
🌿 AGAM Healthier Choice
# #பிரண்டை ValueAddition TamilFarmer NaturalFood HealthyFood AgamHealthierChoice Agriculture FarmBusiness TraditionalFood

11/07/2026

✨ மூன்றாவது நாளில் அடிவைக்கும் அக்ரி இன்டெக்ஸ் 2026! 🧑‍🌾
விவசாயிகளின் பேராதரவோடு வெற்றிகரமாக 3-வது நாளில்... புதிய கண்டுபிடிப்புகள், நவீன இயந்திரங்கள் மற்றும் வணிக வாய்ப்புகளை அறிந்து கொள்ள தவறவிடாதீர்கள்!

08/07/2026

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே! 🙏
AGAM Healthier Choice பெருமையுடன் கோயம்புத்தூர் CODISSIA AGRI INTEX 2026 கண்காட்சியில் பங்கேற்கிறது. 🎉
🌿 பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அகம் இடிச்ச மசாலாக்கள்
🪵 மரச்செக்கு எண்ணெய்கள்
🌾 கல் உரல் அரைத்த மாவுகள்
🥣 ஆரோக்கிய உணவுப் பொருட்கள்
எங்களின் அனைத்து தயாரிப்புகளையும் ஒரே இடத்தில் பார்த்து, தரத்தை அறிந்து, நேரடியாக வாங்கும் அரிய வாய்ப்பு!
📍 இடம்: CODISSIA Trade Fair Complex, Coimbatore
📅 தேதி: 09.07.2026 – 13.07.2026
பாரம்பரியத்தின் சுவை... இயற்கையின் நன்மை...
AGAM Healthier Choice உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Ph 9751285745
# Coimbatore TraditionalMasala WoodPressedOil StoneGround HealthyFood MadeInTamilNadu SupportLocal AgamSpices Expo2026

07/07/2026

வணக்கம்! 🙏
எங்கள் AGAM இடிச்ச மசாலா கடையின் ஒரு வருட பயணத்தில் எங்களுடன் இணைந்து, நம்பிக்கையுடன் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து அன்பு வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ❤️
இந்த ஒரு வருடத்தில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு உங்கள் நம்பிக்கையே.
"விலை மாறலாம்... ஆனால் தரம் மட்டும் மாறக்கூடாது!" என்று எங்களிடம் கூறிய உங்கள் வார்த்தைகள், எங்களுக்கு ஒரு பொறுப்பாக மாறியுள்ளது.
அதே தரம்... அதே சுவை... அதே நேர்மை...
இவற்றை என்றும் காப்பாற்றுவோம் என்று மீண்டும் உறுதியளிக்கிறோம்.
🌿 எங்கள் கடையில் கிடைக்கும் பொருட்கள்: ✅ இடிச்ச மசாலா வகைகள் ✅ மரச்செக்கு எண்ணெய்கள் ✅ கல் அரைத்த மாவுகள் ✅ ஆரோக்கியப் பொடிகள் ✅ பாரம்பரிய அரிசி வகைகள் ✅ மேலும் பல இயற்கை உணவுப் பொருட்கள்
இதுவரை எங்கள் கடைக்கு வராதவர்கள், ஒரு முறை வந்து பாருங்கள். தரத்தையும், உண்மையான சுவையையும் நீங்களே அனுபவியுங�

Address

Ganesha Puram, Madathukulam
Madathukulam
642113

Alerts

Be the first to know and let us send you an email when AGAM Healthier Choice அகம் ஆரோக்கியமான தேர்வு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share