05/09/2025
சங்கம்5
நான் ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட உலகப் பெரும் மொழிகள் சிலவற்றின் இலக்கண அடிப்படைகள் படித்துள்ளேன். ஆனால் தொல்காப்பியத்துடன் ஒப்பிடுகையில் அவை 30 மதிப்பெண்கள்கூட தேறாது. தொல்காப்பியம் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. அதன் வியப்பிற்குரிய நுண்ணியங்களை ஆழ உற்று நோக்கினால் இன்றைய Advanced Quantum Computing Algorithm போன்ற விசயத்தை 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் அறிவுச் சமூகம் எழுதியது எனக் கொள்ளலாம். இடைக்காலத்தில் எப்படி நாம் வீழ்ந்தோம் என்பதற்குத்தான் முழுமையான விடையில்லை. ஆனால் மீண்டும் எழ வேண்டும் என்ற வேட்கை பலருக்கும் இருக்கிறது. எழ முடியுமென்ற கூட்டுத் தன்னம்பிக்கை எமது The Rise - எழுமின் உலகக் குடும்பத்திற்கு இருக்கிறது. ஆனால் உழைக்க வேண்டும். வேற்றுமைகள் களைந்து, அன்பு - நட்பு மட்டுமே ஆயுதங்களாய் கொண்டு அறிவுபூர்வமாய் உழைக்க வேண்டும். அடுத்த 70 ஆண்டுகள் எவ்வித சுய எதிர்பார்ப்புகளுமின்று உழைக்க வேண்டும். தொழில் - வணிகம் - பேரறிவுத் துறைகளை பெரிதாக வெல்ல வேண்டும். இவ் 70 ஆண்டுகளின் காலக்கட்டம் சங்கம்5 என அறியப்படும். இதனை மாமதுரையில் 2026 ஜனவரி 08 - 11 வரை நடைபெறும் எமது 16-ம் உலக மாநாடு அறிவிக்கும். ஒரு மாபெரும் நெடும் பயணம் தொடங்கும். மாநாட்டிற்குப் பதிவு செய்ய www.tamilrise.org அல்லது +91 9150060032 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முதலில் தொழில் வணிக- திறன் சமூகத்தை அழைக்கிறோம். பின்னர் எல்லோரையும் அழைப்போம்.
தமிழ்ப்பணி ம. ஜெகத் கஸ்பர்.